Essential பேக்கேஜ்
அடிப்படைத் தரத்தில் உறுதியான கட்டுமானம்
சதுர அடி விலை
| தரைத்தளம் | ₹2,500 |
|---|---|
| முதல் தளம் | ₹2,300 |
| இரண்டாம் தளம் | ₹2,500 |
| ஹெட்ரூம் (7 அடி உயரம்) | ₹2,200 |
ஹெட்ரூம் 9.5 அல்லது 10 அடி உயரம் என்றால் அந்தத் தளத்தின் விலையிலேயே சேர்த்து உள்ளிடவும்.
முக்கிய குறிப்பு: இது தோராய மதிப்பீடு மட்டுமே. இறுதி விலை, உங்கள் மனை அமைந்துள்ள இடம், கட்டுமானப் பொருட்கள் கிடைக்கும் தூரம், தளத்தை மேற்பார்வையிட நாங்கள் பயணிக்கும் தூரம், அந்தப் பகுதியில் தொழிலாளர்கள் கிடைப்பது ஆகியவற்றைப் பொறுத்து மாறலாம். மனையைப் பார்த்த பிறகே எழுத்துப்பூர்வ மதிப்பீடு வழங்கப்படும்.
பொன்னமராவதியிலிருந்து சுமார் 20 கி.மீ சுற்றளவுக்குள் இதே ரேட்டில் கட்டித் தருகிறோம். அதற்கு மேல் உள்ள இடங்களுக்கு மனையைப் பார்த்த பின்னரே முடிவு செய்யப்படும்.
பொன்னமராவதியிலிருந்து சுமார் 20 கி.மீ சுற்றளவுக்குள் இதே ரேட்டில் கட்டித் தருகிறோம். அதற்கு மேல் உள்ள இடங்களுக்கு மனையைப் பார்த்த பின்னரே முடிவு செய்யப்படும்.
Essential பேக்கேஜில் செய்யப்படும் வேலைகள்
கட்டுமானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பயன்படுத்தப்படும் பொருட்களும் செய்யப்படும் வேலைகளும் கீழே உள்ளன.
1. கட்டுமானப் பொருட்கள்
- சிமெண்ட்: அஸ்திவாரம், தூண், பீம், சன்சைடு, லிண்டல், சுவர், பூச்சுக்கு டால்மியா அல்லது ராம்கோ PPC. கூரைத் தளத்துக்கு OPC 53 அல்லது அல்ட்ராடெக் PPC.
- TMT கம்பி: Fe500D கிரேடு, BIS/ISI குறியுடன்; 6, 8, 10, 12, 16 மிமீ அளவுகள்.
- செங்கல்: தரமான களிமண் செங்கல்; வெளிப்புறச் சுவர் 9 அங்குலம், உட்புறப் பிரிவுச் சுவர் 4.5 அங்குலம்.
- மணல்: M-Sand; பூச்சுக்கு P-Sand.
- ஜல்லி: 20 மிமீ; தரைப் படுக்கைக்கு 40 மிமீ.
2. முகப்புக் கதவு
- முகப்புக் கதவின் நிலையும் கதவும் முதல் தர நைஜீரியா தேக்கு மரத்தால் செய்யப்படும்.
- நிலையின் மரப் பரிமாணம் 6 அங்குலம் × 4 அங்குலம்; கதவு 8 அடி உயரம், இரட்டைக் கதவு.
- முகப்புக் கதவுக்குப் பாலிஷ் செய்யப்படும்.
3. உட்புற நிலைகள், கதவுகள்
- நிலைகள் மகாகனி அல்லது வேப்ப மரம்; மரப் பரிமாணம் 4 அங்குலம் × 3 அங்குலம்.
- படுக்கை அறை: நிலை 7 அடி × 3 அடி, ஒற்றைக் கதவு.
- பூஜை அறை: நிலை 7 அடி × 2.5 அடி, ஒற்றைக் கதவு.
- சமையலறை: நிலை 7 அடி × 3 அடி, ஒற்றைக் கதவு.
- கதவுகள்: ரெடிமேட் வாட்டர் ப்ரூஃப் ஃப்ளஷ் கதவுகள்.
- குளியலறை, கழிப்பறை: PVC கதவு, 7 அடி × 2.5 அடி; மர நிலை இல்லை.
4. ஜன்னல்கள்
- நிலை, கதவுகள் மகாகனி அல்லது வேப்ப மரம்; மரப் பரிமாணம் 4 அங்குலம் × 3 அங்குலம்.
- உயரம் 4 அடி; அகலம் அறையின் அளவுக்கேற்ப 3, 4 அல்லது 5 அடி.
- 3.5 மிமீ கண்ணாடி.
- சதுர கம்பி கிரில்.
5. டைல்ஸ், கிரானைட்
- தரை: நானோ வெட்ரிஃபைட் 2×2 அடி டைல்ஸ், சதுர அடிக்கு ₹40 (பொருள் விலை).
- சுவர் டைல்ஸ்: சதுர அடிக்கு ₹30. சமையலறை மேடையிலிருந்து 4 அடி உயரம் வரை; குளியலறை, கழிப்பறையில் 7 அடி உயரம் வரை.
- மொட்டை மாடி: வெதரிங் டைல்ஸ்.
- டைல்ஸ் பதிக்கும் கூலி ஒப்பந்த விலையில் உள்ளடங்கும். அதிக விலை டைல்ஸ் தேர்ந்தால் வித்தியாசத் தொகை மட்டும் செலுத்தினால் போதும்.
- கிரானைட் பதிப்பதாக இருந்தால் வித்தியாசத் தொகை, பதிக்கும் கூலி தனி.
6. பெயிண்ட்
- Birla Opus பெயிண்ட்.
- வெளிப்புறச் சுவர்: வெள்ளை ஒரு கோட், கலர் இரண்டு கோட்.
- உட்புறச் சுவர்: சுவர் புட்டி இல்லை.
- மர வேலைகள், கிரில்: பிரைமர் ஒரு கோட், எனாமல் இரண்டு கோட்.
7. மின்சாரம்
- வயரிங்: Kundan செம்பு வயர்; 1, 1.5, 2.5, 4 சதுர மிமீ அளவுகள்.
- சுவிட்ச், பிளக்: Hi-Fi பிராண்ட், brushing type.
- 2 போல் ஐசோலேட்டர் வைக்கப்படும்.
- படுக்கை அறை, பூஜை அறை: ஒவ்வொன்றுக்கும் ஒரு டியூப் லைட், ஒரு நைட் லாம்ப், ஒரு ஃபேன், ஒரு பிளக் பாயிண்ட்.
- ஹால்: சுவர்களில் 4 பாயிண்டுகள் (2 டியூப் லைட், 2 வால் லைட்), கூரை மூலைகளில் 4 லைட் பாயிண்டுகள், கூரை மையத்தில் 2 ஃபேன் பாயிண்டுகள், ஒரு கொத்து லைட் பாயிண்ட், இரண்டு சுவிட்ச் பெட்டிகளில் தலா ஒரு பிளக் பாயிண்ட்.
- சமையலறை: ஒரு டியூப் லைட், ஒரு நைட் லாம்ப், ஒரு பிளக் பாயிண்ட், சிங்க் அருகில் வாட்டர் ஃபில்டருக்கு ஒரு பாயிண்ட், மேடையில் இண்டக்ஷன், மிக்ஸிக்குத் தலா ஒன்று, ஃப்ரிட்ஜுக்கு 16 ஆம்ப்ஸ் பவர் பாயிண்ட் ஒன்று.
- குளியலறை: ஒவ்வொன்றுக்கும் ஒரு LED லைட் பாயிண்ட்.
8. பிளம்பிங்
- பிளம்பிங் வேலைகள் முழுவதும் தனி.
9. தனி வேலைகள்
- போர்வெல்
- மின் இணைப்பு (EB) மற்றும் மீட்டர்
- கட்டிட அனுமதிக் கட்டணம்
- காம்பவுண்ட் சுவர் மற்றும் கேட்
- வெளிப்புறத் தரை வேலைகள்
- காவலாளர் அறை, பொருட்கள் வைக்கும் செட் (உரிமையாளர் அமைத்துத் தர வேண்டும்)
- ஃபர்னிச்சர், அலங்கார வேலைகள்
- செப்டிக் டேங்க், சம்ப்
- ஹீட்டர், ஏசி, யுபிஎஸ் பாயிண்டுகள்; குளியலறையில் பவர் பாயிண்ட்; கூடுதல் பாயிண்டுகள்
- மோட்டார் சுவிட்சுகள், மீட்டர் பேனல் போர்டு, மீட்டர் இணைப்பு
- எலக்ட்ரிக்கல் ஃபிட்டிங்ஸ் (டியூப் லைட், ஃபேன் போன்றவை) மற்றும் அவற்றைப் பொருத்தும் கூலி
10. அளவீட்டு முறை
- ஒவ்வொரு தளமும் தனித்தனியாகக் கணக்கிடப்படும். ஒவ்வொரு தளத்துக்கும் அந்தத் தளத்துக்கான சதுர அடி விலை பொருந்தும்.
- படிக்கட்டுப் பகுதி ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியாகக் கணக்கிடப்படும்.
- ஹெட்ரூம் 9.5 அல்லது 10 அடி உயரம் இருந்தால், அது அமையும் தளத்தின் சதுர அடி விலையிலேயே கணக்கிடப்படும்.
- ஹெட்ரூம் 7 அடி உயரம் இருந்தால், அது எந்தத் தளத்தில் அமைந்தாலும் ஹெட்ரூமுக்கான நிலையான விலை பொருந்தும்.
- கட்டுமானம் முடிந்த பின் அளந்து இறுதிப் பரப்பு சரிசெய்யப்படும்.
மேற்கண்ட விவரங்கள் இறுதி ஒப்பந்தத்தில் முழுமையாக இடம்பெறும்.
